/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்
/
30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்
30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்
30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்
ADDED : டிச 30, 2025 05:14 AM

பெ.நா.பாளையம்: வீரபாண்டி பிரிவில் உள்ள, இமாக்குலேட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 1995ம் ஆண்டு, 10ம் வகுப்பு முடித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நடந்தது. 41 முன்னாள் மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தங்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், அந்தாக்ஷரி பாடல்களை பாடியும், தனித்திறமைகளை வெளிப்படுத்தியும் மகிழ்ந்தனர். கூட்டத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகளை மேற்கொள்வது எனவும், இதேபோல மற்றொரு சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, அதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பங்கு பெற செய்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.