ADDED : ஆக 23, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
பூமார்க்கெட்: டவுன்ஹால், ஐந்து முக்கு பகுதியை சேர்ந்த விஜயானந்த், நேற்று முன்தினம் இரவு ஜெயின் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு கேட்பாரற்று கிடந்த பையை எடுத்து பார்த்த போது, அதில் ரூ.1.75 லட்சம் பணம் இருந்தது.
பணப்பையை வெரைட்டி ஹால் போலீசாரிடம் ஒப்படைத்தார். அதேசமயம் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நிர்மல் ராவல் பணத்தை தவறவிட்டதாக புகார் அளிக்க ஸ்டேஷன் வந்திருந்தார். விசாரணையில் விஜயானந்த் ஒப்படைத்த பணம், நிர்மல் ராவல் தவறவிட்டது என உறுதியானது.
போலீஸ் துணை கமிஷனர்(தெற்கு) கார்த்திகேயன், உக்கடம் ஏ.சி., முருகேசன், இன்ஸ்பெக்டர் வெற்றிசெல்வி எஸ்.ஐ., சுப்பிரமணியம் முன்னிலையில் பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கண்டெடுத்த பணத்தை ஒப்படைத்த விஜயானந்தின் நேர்மையை போலீசார் பாராட்டினர்.
