ADDED : ஆக 23, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: கேரளாவில் ஓணம் பண்டிகையொட்டி, மேட்டுப்பாளையத்தில் கேரட், பீட்ரூட், பீன்ஸ் விற்பனை ஜோராக நடந்தது. விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
மேட்டுப்பாளையம் -– அன்னுார் சாலையில் உள்ள மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு, நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகள், கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரட், மூட்டை கோஸ், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் வருகின்றன. ஓணம் பண்டிகை முன்னிட்டு, மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் வாங்க கேரள வியாபாரிகள் அதிகம் ஆர்வம் காட்டினர்.
மார்க்கெட் காய்கறி கடை உரிமையாளர் ராஜா கூறுகையில், ‘‘கேரளாவில் ஓணம் கொண்டாட்டம் முன்னிட்டு, மார்க்கெட்டில், காய்கறிகளின் விற்பனை தேக்கம் இன்றி விறுவிறுப்பாக நடக்கிறது. காய்கறிகள் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை விலை உயர்ந்து விற்பனை ஆனது,’’
----
