ADDED : ஜன 08, 2026 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட, 14வது வார்டு வி.சி.எஸ்., நகரில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
அதே வார்டில் 5 லட்ச ரூபாய் மதிப்பில் பூங்கா நடைபாதை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையும் நடந்தது. பணிகளை, கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார் துவக்கி வைத்தார். அ.தி.மு.க., துடியலூர் பகுதி செயலாளர் வனிதாமணி, ஐ.டி., விங் மாவட்ட செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

