நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பழமையான கோவில் இடித்து அகற்றப்பட்டது. இதை எதிர்த்து போராட்டம் நடத்திய ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவத்தை கண்டித்து, அன்னூர் வட்டார ஹிந்து முன்னணியினர் அன்னூர் கைகாட்டி முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். கோஷங்கள் எழுப்பினர்.
அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையிலான போலீசார் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 18 பேரையும் கைதுசெய்து, தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

