/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்ணிடம் நான்கரை சவரன் நகை பறிப்பு
/
பெண்ணிடம் நான்கரை சவரன் நகை பறிப்பு
ADDED : மே 14, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்; கோவை, போத்தனூர் அடுத்து கணேசபுரத்தை சேர்ந்தவர் பிரேமா; டெய்லரிங் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, கடையிலிருந்து வீட்டுக்கு ஸ்கூட்டரில், பொள்ளாச்சி சாலையில் வந்து கொண்டிருந்தார்.
ஈச்சனாரி அடுத்து தனியார் கல்லூரி அருகே, பின்னால் பைக்கில் வந்த இருவர், இவரது கழுத்திலிருந்த நான்கரை சவரன் தங்க நகையை பறித்து தப்பினர். பிரேமா புகாரில், சுந்தராபுரம் போலீசார் தப்பிய இருவரையும் தேடுகின்றனர்.