ADDED : ஏப் 25, 2025 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலை: ஆனைமலையில், தனியார் பகுதியில், சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு ஆனைமலை போலீசார் விரைந்தனர்.
போலீசாரை பார்த்து அங்கிருந்த தப்பிக்க முயன்ற நால்வரை மடக்கினர். அவர்கள், பணம் வைத்து, சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவர்களிடம் இருந்து, சீட்டுக் கட்டுகள், 2,110 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் அவர்கள், ஆனைமலையைச்சேர்ந்த முருகன், 50, திம்மக்குத்து கிட்டுசாமி, 55, ஆத்துப்பொள்ளாச்சி முருகேசன், 65, தாத்துாரைச் சேர்ந்த சக்தியாந்தம், 48 ஆகியோர் என்பதும் தெரிந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.