ADDED : பிப் 17, 2026 07:35 AM
போத்தனூர்: சுண்டக்காமுத்தூர் மெயின் ரோடு, கங்கா நகரை சேர்ந்தவர் கார்த்திக், 27. இவரது நண்பர் விஸ்வாவின் சகோதரருக்கும் சஞ்சய் என்பவருக்குமிடையே காதல் பிரச்னை இருந்தது. கார்த்திக் சமாதானம் செய்ய முயன்றார். இதனால் கார்த்திக், சஞ்சய் மற்றும் அவரது நண்பர்களுக்கிடையே முன்விரோதம் ஏற்பட்டது.
கடந்த, 13 இரவு குனியமுத்தூர், பிளேக் மாரியம்மன் கோவில் அருகே கார்த்திக் செல்லும்போது, சஞ்சய் உள்ளிட்ட கோஷ்டி வழிமறித்து, கைகளால் தாக்கி, கத்தியால் குத்தியது. உடனிருந்த விஸ்வா, சூர்யா ஆகியோரும் தாக்கப்பட்டனர். அப்பகுதியிலிருந்தோர் ஓடி வந்தனர். இதனை கண்ட சஞ்சய் உள்ளிட்ட கோஷ்டி, கத்தியை காட்டி மிரட்டி தப்பியது. கார்த்தி புகாரில் குனியமுத்தூர் போலீசார் விசாரித்து, சஞ்சய், அசாருதீன், விஷ்ணு, மனோஜ்குமார் ஆகியோரை கைது செய்தது. சந்தோஷ், அபிஷேக் ஆகியோரை தேடுகின்றனர்.
