/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்கு நாட்களுக்கு மழை உண்டு: வானிலை ஆராய்ச்சியாளர் தகவல்
/
நான்கு நாட்களுக்கு மழை உண்டு: வானிலை ஆராய்ச்சியாளர் தகவல்
நான்கு நாட்களுக்கு மழை உண்டு: வானிலை ஆராய்ச்சியாளர் தகவல்
நான்கு நாட்களுக்கு மழை உண்டு: வானிலை ஆராய்ச்சியாளர் தகவல்
ADDED : அக் 21, 2024 11:50 PM
கோவை : கோவை நகர்ப்பகுதி மட்டுமின்றி, மாவட்டத்தின் இதரப் பகுதிகளிலும் இம்மாத துவக்கத்தில் இருந்து நல்ல மழைப்பொழிவு காணப்படுகிறது. அணைகளின் நீர் மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.
சிறுவாணி அணை பகுதியில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 21 மி.மீ., அடிவாரத்தில் 6 மி.மீ., மழை பதிவானது. நீர் மட்டம், 43.39 அடியாக இருக்கிறது. 9.66 கோடி லிட்டர் குடிநீர் தேவைக்காக எடுக்கப்பட்டு, கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
இதர பகுதிகளில் பெய்த மழையளவு: கோவை தெற்கு தாலுகா - 12.90 மி.மீ., சூலுார் - 28.20, வாரப்பட்டி - 60, தொண்டாமுத்துார் - 33, மதுக்கரை தாலுகா - 21, போத்தனுார் - 13.20, கிணத்துக்கடவு - 17, ஆனைமலை - 24, ஆழியார் - 59.60, சின்கோனா - 44, சின்னக்கல்லார் - 68, வால்பாறை - 67, சோலையார் - 13, பில்லுார் அணை - 8, வேளாண் பல்கலை - 7.80, பீளமேடு விமான நிலையம் - 7.10 மி.மீ., மழை பதிவாகியிருக்கிறது.
வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறுகையில், ''கொங்கு மண்டலத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கன மழை தொடரும்.
''கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை தொடரும்,'' என்றார்.