sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்ற நான்கு பழைய குற்றவாளிகள் : கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மாவு கட்டு போடப்பட்டது

/

போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்ற நான்கு பழைய குற்றவாளிகள் : கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மாவு கட்டு போடப்பட்டது

போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்ற நான்கு பழைய குற்றவாளிகள் : கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மாவு கட்டு போடப்பட்டது

போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்ற நான்கு பழைய குற்றவாளிகள் : கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மாவு கட்டு போடப்பட்டது

1


ADDED : பிப் 05, 2026 06:33 AM

Google News

ADDED : பிப் 05, 2026 06:33 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவையில், போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்ற நான்கு பழைய குற்றவாளிகளுக்கு கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மாவு கட்டு போடப்பட்டது.

கோவையில் பழைய குற்றவாளிகள் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது குறித்து போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், கோவை ரத்தினபுரி போலீசார், 3ம் தேதி இரவு 11:30 மணிக்கு அமரர் ஜீவானந்தம் ரோடு பகுதியில் நின்ற மூவரிடம் விசாரித்தனர். அதில் அவர்கள் காந்திபுரத்தை சேர்ந்த ஜோஸ்வா தவபிரியன், 27, சுவிட்சன் பெர்னாட், 26, திருப்பூர் வள்ளிபாளையத்தை சேர்ந்த பரணி சவுந்தர், 24 எனத் தெரிந்தது. மூவரும் பழைய குற்றவாளிகள் எனத் தெரிந்தது. சோதனையில் அவர்கள் 5.500 கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரிந்தது.

இதையடுத்து போலீசார் மூவரையும் கைது செய்தனர். போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வரும் போது தப்பிக்க, ரத்தினபுரி ரயில்வே மேம்பாலத்தில் இருந்து குதித்தனர். அதில் மூவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மாவு கட்டு போடப்பட்டது. அதேபோல், முன்விரோத வழக்கில் ஒருவரை வெட்டிய சரித்திர பதிவேடு குற்றவாளி தப்ப முயன்ற போது கீழே விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

கோவை அம்மன்குளத்தில் 2020ல் கபடி போட்டி நடந்தது. அப்போது ஏற்பட்ட தகராறில் நவீன்குமார், 21 என்பவர் கொல்லப்பட்டார். இவ்வழக்கில், அம்மன்குளத்தை சேர்ந்த விஜயகுமார், 23, கண்ணன், 21, பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஹரிஹரன், 21 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கு நடந்து கொண்டிருந்த போது, 2021 ம் ஆண்டு, நவீன்குமாரின் நண்பரான அம்மன்குளத்தை சேர்ந்த பார்த்தீபன், 26 உள்ளிட்ட சிலர் ஹரிஹரன், கண்ணன் ஆகியோரை வெட்டி கொல்ல முயன்றனர். நவீன்குமார் கொலை வழக்கில், ஹரிஹரன், கண்ணன் ஆகியோருக்கு, ஆயுள் தண்டனை மற்றும், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீடு செய்ய ஜாமின் பெற்று வெளியில் வந்தனர்.

கடந்த, 2ம் தேதி பார்த்தீபனை பார்த்த ஹரிஹரன், கண்ணன் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி, கத்தியால் வெட்டினர். தடுக்க முயன்ற பார்த்தீபனின் நண்பர் கிருஷ்ணமூர்த்தியையும் தாக்கினர்.

ராமநாதபுரம் போலீசார் ஹரிஹரன், கண்ணன் ஆகிய இருவரையும், 3 ம் தேதிகைது செய்தனர். நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லும் போது தப்ப முயன்ற ஹரிஹரனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஹரிஹரன், கண்ணன் ஆகியோர் பழைய குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us