/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆபீசை சுத்தம் செய்த விவகாரம் அறிக்கை அளிக்க செயலர் உத்தரவு
/
ஆபீசை சுத்தம் செய்த விவகாரம் அறிக்கை அளிக்க செயலர் உத்தரவு
ஆபீசை சுத்தம் செய்த விவகாரம் அறிக்கை அளிக்க செயலர் உத்தரவு
ஆபீசை சுத்தம் செய்த விவகாரம் அறிக்கை அளிக்க செயலர் உத்தரவு
ADDED : பிப் 05, 2026 06:07 AM
கோவை: கோவை, மேட்டுப்பாளையம் கிளை, அரசு போக்குவரத்து கழக பணிமனையில், தி.மு.க., தொழிற்சங்க நிர்வாகி சசிராஜ் மீது சக ஊழியர்கள், போக்குவரத்து உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினர்.
அதில், பட்டியல் இனத்தை சேர்ந்த புதிய கிளை மேலாளர் பிரகாஷ்குமாரை, தன் அறிவுறுத்தல்களை பின்பற்ற சசிராஜ் நிர்பந்தித்தார். மறுத்த கிளை மேலாளரை, உக்கடம் கிளைக்கு மாற்றினார். மேலும், பணிப்பெண் மூலம் மேலாளரின் அலுவலக தரையை, மாட்டு சாணத்தால் சுத்தப்படுத்த செய்தார் என, தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, சசிராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து, விரிவான அறிக்கை அளிக்க, போக்குவரத்து துறை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு உத்தரவிட்டுள்ளார்.