/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழ்க்கை எளிதாக உதவும் நான்கு அம்சங்கள்: பாஸ்கி
/
வாழ்க்கை எளிதாக உதவும் நான்கு அம்சங்கள்: பாஸ்கி
ADDED : ஆக 26, 2025 10:43 PM

கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு, மயிலேறிபாளையம் சசி கிரியேட்டிவ் கல்லுாரியில், நிறுவனர் நாள் விழா நேற்று நடந்தது. நிறுவனர் சுவாமிநாதன் தலைமை வகித்தார்.
இந்திய ஆர்க்கிடெட் நிறுவன, கோவை துணைத் தலைவர் ஹரி பாஸ்கர் பேசுகையில், ''உங்களின் சுயவிவரக் குறிப்பை கல்வியாண்டின் இறுதியில் தயாரிக்காதீர்கள். முதலாண்டில் இருந்தே கட்டமையுங்கள்,'' என்றார்.
தலைமை விருந்தினர் நடிகர் பாஸ்கி பேசுகையில், ''சுற்றியுள்ள எல்லாருமே உங்களை நிராகரிக்கலாம்; உங்களால் முடியாது எனலாம். அதையெல்லாம் காதிலேயே போட்டுக் கொள்ளாதீர். தன்னம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்.
எதையும் பொறுப்பெடுத்துக் கொண்டு செயல்படுங்கள். ஏதேனும் ஒரு விளையாட்டு, யோகா, இசை, நகைச்சுவையுணர்வு ஆகிய, இந்த நான்கையும் தினசரி பின்பற்றுங்கள். இந்தக் கணத்தில் வாழுங்கள்; வாழ்க்கை எளிதாகும்,'' என்றார்.
விழாவின் ஒரு பகுதியாக, மாணவர் இதழ் வெளியிடப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விருது, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சசி கிரியேட்டிவ் கல்லுாரிகள் தலைவர் ராஜ்தீபன், ஆர்க்கிடெக்ட் துறை முதன்மையர் நசிகேத பதஞ்சலி, டிசைன் துறை முதன்மையர் ஜெய் மேனன், ஆர்கிடெட் துறைத் தலைவர் சங்கமித்திரை, டிசைன் துறைத் தலைவர் சில்பா உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.