/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண் உட்பட நால்வர் காயம்: போலீசார் விசாரணை
/
பெண் உட்பட நால்வர் காயம்: போலீசார் விசாரணை
ADDED : பிப் 18, 2024 02:00 AM
போத்தனுார்:உக்கடம், புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சரண்யா, 22. கணவரை பிரிந்து சீரபாளையம், கிரீன் பார்க் பாரடைஸ் பகுதியில், அஜித்குமார் என்பவரின் வீட்டில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் காதலரான உக்கடம், புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த நிஷாருதீன், 26 நண்பர்களான ரஞ்சித், சூர்யா, பிச்சை பாண்டிஆகியோருடன், அஜித்குமா ரின் வீட்டுக்கு சென்றார்.
அங்கிருந்த சரண்யாவை தன்னுடன் வருமாறு கூறி தாக்கியுள்ளார்.
அங்கு வந்த அஜித்குமார் அவரது நண்பர் கிருபாசங்கர் ஆகியோர் தடுத்தபோது, ரீப்பர் கட்டை, கத்தியால் தாக்கினர். அப்போது அஜித்குமார் தாக்கியதில் நிஷாருதீனுக்கும் காயமேற்பட்டது. சரண்யா உள்ளிட்ட மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். நிஷாருதீன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
இரு தரப்பினரின் புகாரின் பேரில் மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அஜித்குமாரை கைது செய்தனர்.