/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்கு வழிச்சாலை பணிகள்: உ.பி., ராஜ்யசபா எம்.பி., ஆய்வு
/
நான்கு வழிச்சாலை பணிகள்: உ.பி., ராஜ்யசபா எம்.பி., ஆய்வு
நான்கு வழிச்சாலை பணிகள்: உ.பி., ராஜ்யசபா எம்.பி., ஆய்வு
நான்கு வழிச்சாலை பணிகள்: உ.பி., ராஜ்யசபா எம்.பி., ஆய்வு
ADDED : ஜன 21, 2024 01:59 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை திட்டப் பணிகளை, உ.பி., ராஜ்யசபா எம்.பி., தினேஷ்ஷர்மா ஆய்வு செய்தார்.
மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி -- திண்டுக்கல் கமலாபுரத்தை இணைக்கும் வகையில், நான்கு வழிச்சாலை திட்டம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.
மொத்தம், 3,649 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. பொள்ளாச்சி --- மடத்துக்குளம், 50.07 கி.மீ.,; மடத்துக்குளம் --- ஒட்டன்சத்திரம், 45.38 கி.மீ., மற்றும் ஒட்டன்சத்திரம் --- கமலாபுரம், 36.51 கி.மீ., என, 131.96 கி.மீ., துாரத்துக்கு ரோடு அமைக்கப்படுகிறது.
அதில், பொள்ளாச்சி அருகே குரும்பம்பாளையத்தில் நடக்கும் பணிகளை, உத்தரபிரதேச மாநில முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய ராஜ்யசபா எம்.பி.,யுமான தினேஷ் ஷர்மா நேற்று ஆய்வு செய்தார். திட்ட பணிகள் எந்தளவு முடிந்துள்ளது உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார். பணிகளை வேகப்படுத்தி நிறைவு செய்ய அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
அப்போது, அப்பகுதி மக்கள், 'ஒரு கி.மீ., துாரத்துக்கு சர்வீஸ் ரோட்டை இணைத்தால் பயனாக இருக்கும்,' என கோரிக்கை விடுத்தனர். இதற்கு அவர், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
பா.ஜ., மாவட்ட தலைவர் வசந்தராஜன், நகர தலைவர் பரமகுரு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். பொள்ளாச்சி நகர பா.ஜ.,வினர், 'ரோடு பணிகளை வேகப்படுத்தி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்,' என கோரிக்கை விடுத்தனர்.

