ADDED : ஆக 19, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமநாயக்கன்பாளையம் ஜெ.ஜெ., கார்டனில் வசிப்பவர் பிரதீப் குமார்,34; கடந்த 17ம் தேதி இரவு அங்குள்ள வி.ஜி.பி., கார்டன் அருகில் காலி இடத்தில் ரத்த காயங்களுடன் கிடந்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பெரியநாயக்கன்பாளையம் போலீசாரின் விசாரணையில், சாமநாயக்கன்பாளையம் பூங்கா நகரை சேர்ந்த கார்த்தி, 44, பிரகாஷ், 26, ஹரிகிருஷ்ணன், 23, சிவா, 24, ஆகியோர், மொபைல் போன் திருடியதாக பிரதீப்குமார் மீது குற்றம் சாட்டி, அடித்து உதைத்ததாக தெரியவந்தது. நால்வரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
