ADDED : ஆக 19, 2026 07:55 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை, பயிர் மேலாண்மை இயக்ககத்தின், உழவியல் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டம்,- களை மேலாண் பிரிவின் மூலம், ஒவ்வொரு ஆண்டும் ‘பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரம்’ நடத்தப்படுகிறது.
நேற்று வேளாண் பல்கலை இளங்கலை மாணவர்களுக்கும், பண்ணைப் பணியாளர்களுக்கும் பார்த்தீனியம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியை பயிர் மேலாண்மைத்துறை இயக்குனர் ராஜ்குமார் தொடங்கி வைத்து, பார்த்தீனியம் மேலாண்மையின் முக்கியத்துவத்தையும், அதனால் ஏற்படும் தீய விளைவுகளையும் மாணவர்களிடம் விளக்கினார்.
