/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வியாபாரியை தாக்கிய நான்கு பேர் கைது
/
வியாபாரியை தாக்கிய நான்கு பேர் கைது
ADDED : செப் 20, 2024 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பாளையம் : திருச்செந்தூரை சேர்ந்தவர் ஜோதி பாண்டி, 56. வியாபாரி இவர் சரவணம்பட்டியில் நாராயணன் என்பவரின் பழைய இரும்பு கடையில் பாலு என்பவரை வேலைக்கு சேர்த்துள்ளார். பாலு கடையிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கரைச்சிபுதூர் திருமால், பொள்ளாச்சி கணேஷ், முத்துக்குமார், ராஜேஷ் ஆகிய நான்கு பேரும், ஜோதி பாண்டியை தாக்கினர். இது குறித்து ஜோதி பாண்டி அளித்த புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார், நான்கு பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.