/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஒருவரின் ரத்த தானத்தால் நான்கு பேர் பயன் பெறுவர்'
/
'ஒருவரின் ரத்த தானத்தால் நான்கு பேர் பயன் பெறுவர்'
'ஒருவரின் ரத்த தானத்தால் நான்கு பேர் பயன் பெறுவர்'
'ஒருவரின் ரத்த தானத்தால் நான்கு பேர் பயன் பெறுவர்'
ADDED : அக் 07, 2024 12:46 AM

அன்னுார் : 'ஒருவரின் ரத்த தானத்தால் நான்கு பேர் பயன்பெறுவர்,' என ரத்ததான முகாமில் ரத்த வங்கி மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.
அன்னூர் டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் திருப்பூர் ரோட்டரி ஐ.எம்.ஏ., ரத்த வங்கி சார்பில், ரத்ததான முகாம் நேற்று நடந்தது.
முகாமை ரத்த வங்கி தலைவர் ஆனந்த் ராம் துவக்கி வைத்து பேசுகையில், ''ஒருவர் அளிக்கும் ரத்த தானத்தால் நான்கு பேர் பயன் பெறுவர். ரத்தத்தில் உள்ள சிவப்பணு, வெள்ளை அணு, தட்டை அணு, பிளாஸ்மா என நான்காக பிரிக்கப்பட்டு நான்கு பேருக்கு தரப்படுகிறது. தானமாக பெறப்படும் ரத்தத்தை 21 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்த முடியும். ஒருவரின் உடலில் 5.50 லிட்டர் ரத்தம் உள்ளது. இதில் 350 மில்லி மட்டும் தானமாக பெறப்படுகிறது.
தானமாக வழங்கப்படும் ரத்தம் மூன்றே வாரங்களில் மீண்டும் ஊறிவிடும். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் ரத்த தானம் செய்யலாம். ரத்தத்தில் 19 வகை பிரிவுகள் உள்ளன,'' என்றார்.
முகாமில், 102 பேர் ரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சியில், ரோட்டரி மாவட்ட ஆளுநர் சுரேஷ் பாபு, அன்னுார் சங்கத் தலைவர் அம்பாள் நந்தகுமார், செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் லட்சுமண மூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.