/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண் ஆசிரியரிடம் நான்கு சவரன் பறிப்பு
/
பெண் ஆசிரியரிடம் நான்கு சவரன் பறிப்பு
ADDED : ஏப் 26, 2025 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்; கோவை, சுந்தராபுரம் அடுத்து எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் காயத்ரி, 36; சி.டி.ஓ., காலனி அருகேயுள்ள தனியார் பள்ளி ஆசிரியர். நேற்று மாலை பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றார்.
கோபாலபுரம் அருகே, எதிரே ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த நபர், இவரது நான்கு சவரன் தங்க நகையை பறித்து தப்பினார். சுந்தராபுரம் போலீசார், தப்பிய மர்ம நபரை தேடுகின்றனர்.