/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கஞ்சா விற்றவருக்கு நான்கு ஆண்டு சிறை
/
கஞ்சா விற்றவருக்கு நான்கு ஆண்டு சிறை
ADDED : அக் 27, 2025 11:21 PM
கோவை: கஞ்சா விற்ற நபருக்கு, நான்காண்டு சிறை தண்டனை விதித்து, கோவை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
சிங்காநல்லூர், விவேகானந்தா நகரிலுள்ள காலியிடத்தில், கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. 2016, டிச., 1ல், சிங்காநல்லுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்த போது, ஒண்டிப்புதுார், எஸ்.எம்.எஸ்., லே அவுட் பகுதியை சேர்ந்த கணேஷ்,27, என்பவர் கஞ்சா விற்றது தெரியவந்தது. அவரை கைது செய்து, ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பொட்டலத்தை கைப்பற்றினர்.
கணேஷ் மீது, கோவை இ.சி.கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், கஞ்சா விற்ற கணேசுக்கு, நான்காண்டு சிறை, 20,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் சிவகுமார் ஆஜரானார்.

