/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
/
நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
ADDED : ஜூலை 11, 2025 11:40 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி தெற்கு நகர தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், வெங்கட்ரமணன் வீதியில் நடந்தது. தெற்கு நகர பொறுப்பாளர் அமுதபாரதி தலைமை வகித்தார்.
கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரிகார்த்திக்கேயன் வரவேற்றார். தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் திருமலைராஜா, மணிமாறன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, தலைமை கழக பேச்சாளர் விக்னேஷ் ஆகியோர், நான்கு ஆண்டு சாதனைகள் குறித்து பேசினர்.நகராட்சி தலைவர் சியாமளா, துணை தலைவர் கவுதமன் மற்றும் கவுன்சிலர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.