/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்காவது டிவிஷன் கிரிக்கெட்; ஐந்து விக்கெட் வீழ்த்தி அபாரம்
/
நான்காவது டிவிஷன் கிரிக்கெட்; ஐந்து விக்கெட் வீழ்த்தி அபாரம்
நான்காவது டிவிஷன் கிரிக்கெட்; ஐந்து விக்கெட் வீழ்த்தி அபாரம்
நான்காவது டிவிஷன் கிரிக்கெட்; ஐந்து விக்கெட் வீழ்த்தி அபாரம்
ADDED : ஏப் 07, 2025 05:33 AM

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நான்காவது டிவிஷன் 'எல்ஜி எக்யுப்மென்ட்ஸ் டிராபி' போட்டி எஸ்.என்.எம்.வி., உள்ளிட்ட மைதானங்களில் நடந்துவருகிறது. நேற்று முன்தினம் சாம் கிரிக்கெட் அகாடமியும், சூர்ய பாலா கிரிக்கெட் அகாடமியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த சாம் கிரிக்கெட் அகாடமி அணி, 48.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 200 ரன்கள் எடுத்தது. வீரர் ஹூசெயின், 38 ரன்களும், நிசாந்த், 43 ரன்களும், விஜய பாரதி, 76 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தனர்.
எதிரணி வீரர்கள் ராஜேஷ்குமார் மற்றும் விஷால் தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர். அடுத்து பேட்டிங் செய்த சூர்யபாலா அணியினர், 43.5 ஓவர்களில், 9 விக்கெட் இழப்புக்கு, 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அணி வீரர் சரண், 31 ரன்களும், பிரணவ் சஞ்சய், 43 ரன்களும், கதிர்வேல், 35 ரன்களும் எடுத்தனர். எதிரணி வீரர் வெங்கடேஷ் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தினார்.