/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்காம் டிவிஷன் லீக்எக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் வெற்றி
/
நான்காம் டிவிஷன் லீக்எக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் வெற்றி
நான்காம் டிவிஷன் லீக்எக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் வெற்றி
நான்காம் டிவிஷன் லீக்எக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் வெற்றி
ADDED : மார் 15, 2024 12:16 AM
கோவை;மாவட்ட அளவிலான நான்காவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், எக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின், 2023-24ம் ஆண்டுக்கான லீக் போட்டிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கின்றன. இதன், 'எல்.ஜி., எக்யூப்மென்ட்ஸ் கோப்பைக்கான' நான்காவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'சி' மைதானத்தில் நடந்தது.
இப்போட்டியில் அக்சயா இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் எக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த எக்கர் அணியின் விவேக் குமார் (43), சிவக்குமார் (38), அழகப்பன் (33) பொறுப்பாக விளையாட, அந்த அணி 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. அக்சயா கல்லுாரியின் அரவிந்த் ஐந்து விக்கெட், செந்தில் குமார் மூன்று விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து விளையாடியஅக்சயா அணியின் வீரர்களை எக்கர் அணியின் மாரிமுத்து, விவேக் குமார் ஆகியோர் தங்களின் பந்து வீச்சில் மிரட்டினர். இருவரும் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தி அக்சயா 39.3 ஓவர்களில் அணி 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

