/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்காவது டிவிஷன் போட்டி; சதம் அடித்த சூர்யபாலா வீரர்
/
நான்காவது டிவிஷன் போட்டி; சதம் அடித்த சூர்யபாலா வீரர்
நான்காவது டிவிஷன் போட்டி; சதம் அடித்த சூர்யபாலா வீரர்
நான்காவது டிவிஷன் போட்டி; சதம் அடித்த சூர்யபாலா வீரர்
ADDED : செப் 30, 2025 11:04 PM

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சி.டி.சி.ஏ.,) சார்பில், நான்காவது டிவிஷன் போட்டிகள் சூர்யபாலா, பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடந்து வருகின்றன. கோயம்புத்துார் பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும், சூர்யபாலா கிரிக்கெட்டர்ஸ் அணியும் மோதின. கோயம்புத்துார் பிரண்ட்ஸ் அணியினர், 36.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 161 ரன் எடுத்தனர்.
வீரர்கள் ஆதவன், 40 ரன், ரிஷி சங்கர், 38 ரன், சாமிநாதன், 33 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் மோகன் நான்கு விக்கெட் வீழ்த்தினார். அடுத்து விளையாடிய சூர்யபாலா கிரிக்கெட்டர்ஸ் அணியினர், 32.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு, 165 ரன் எடுத்தனர். வீரர்கள் விக்னேஷ்வர், 115 ரன், மோகன், 42 ரன் எடுத்தனர்.