/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி; 2 பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது
/
போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி; 2 பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது
போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி; 2 பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது
போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி; 2 பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது
ADDED : நவ 15, 2024 09:53 PM
கோவை ; கோவை, குறிச்சி பகுதியில் போலி ஆவணங்கள் தயார் செய்து 75 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயன்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை குறிச்சி பகுதியில் பாக்கியம் என்பவருக்கு சொந்தமாக 2.40 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை விஜயகுமார் கடந்த 2006ம் ஆண்டு ரூ. 95,850க்கு வாங்கினார். அந்த இடத்தில் விஜயகுமார் மற்றும் அவரின் அண்ணன் இணைந்து நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாக்கியம் என்பவருக்கு பதிலாக சிவபாக்கியம் என்பவரை ஆள்மாறாட்டம் செய்து, போலி வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை தயாரித்து, அந்த இடத்தை முபாரக் அலி என்பவருக்கு விற்பனை செய்தது போல் கிரையம் செய்துள்ளனர். மேலும், முபாரக் போலி ஆவணங்களை காட்டி, விஜயகுமாரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
சம்பவம் குறித்து விஜயகுமார் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, முபாரக் அலி, சிவபாக்கியம், 70, சாந்தி, 43, கவுதமன், 31, நிஷார் அகமது, 38 ஆகியோர் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஐந்து பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.