/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாகனத்தை திருப்பி தராமல் ரூ.1.5 லட்சம் மோசடி
/
வாகனத்தை திருப்பி தராமல் ரூ.1.5 லட்சம் மோசடி
ADDED : மார் 15, 2024 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனுார்:க. க.சாவடி அருகேயுள்ள கவுண்டன்புதுார், திரு.வி.க.,வீதியை சேர்ந்தவர் சிவகுமார்,30, சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார்.
தனது குடும்ப திருமண செலவிற்காக குனியமுத்துாரை சேர்ந்த சலீம் என்பவரிடமிருந்து, 1.5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். இதற்காக வாகனத்தை அவரிடம் ஒப்படைத்திருந்தார்.
சில மாதங்களுக்கு பிறகு, தொகையை திரும்ப கொடுத்தார். வாகனத்தை கேட்டபோது திரும்ப தராமல் சலீம் காலம் தாழ்த்தினார்.
இதுகுறித்து சிவகுமார் புகாரின்பேரில் குனியமுத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

