/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொத்தாக லாபம் கிடைக்கும் என்று ஆசைக்காட்டி ரூ.36 லட்சம் மோசடி
/
கொத்தாக லாபம் கிடைக்கும் என்று ஆசைக்காட்டி ரூ.36 லட்சம் மோசடி
கொத்தாக லாபம் கிடைக்கும் என்று ஆசைக்காட்டி ரூ.36 லட்சம் மோசடி
கொத்தாக லாபம் கிடைக்கும் என்று ஆசைக்காட்டி ரூ.36 லட்சம் மோசடி
ADDED : மே 29, 2025 12:14 AM
கோவை; ஆன்லைன் டிரேடிங்கில் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு, கோவையை சேர்ந்த இருவர் ரூ. 36 லட்சத்தை இழந்தனர்.
* கோவை ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன், 52; கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர் இணைய தளத்தில் டிரேடிங் குறித்த பார்த்த போது, சி.பி.எக்ஸ்., குளோபல் என்ற டிரேடிங் செயலியின், விளம்பரம் வந்துள்ளது.
அந்த செயலியை பதிவிறக்கம் செய்தார். அதில் கொடுக்கப்பட்டிருந்த, வங்கி கணக்குகளுக்கு மே 13ம் தேதி முதல் 20ம் தேதி வரை, 10 தவணைகளில் ரூ. 14 லட்சத்தை அனுப்பினார். ஆனால், இவர் அனுப்பிய பணத்துக்கான லாபம் கிடைக்கவில்லை. இது குறித்து கேட்ட போது, மோசடி நபர்களிடம் இருந்து முறையான பதில் கிடைக்கவில்லை.
* இதேபோல், பீளமேடு பகுதியில் வசிக்கும் சிவகுமார், 46 என்பவரின் வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்ட நபர், 'ஜெயினம் புரோக்கிங் ஸ்டாக் மார்க்கெட்' குழுவில் இணைந்து, முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். சிவகுமாரின் எண்ணை 'வாட்ஸ் அப்' குழுவில் இணைத்துள்ளனர்.
அதன் மூலம், எட்டு தவணைகளில் சிவக்குமார், ரூ.22 லட்சம் பணத்தை அனுப்பினார். பணத்தை பெற்றுக்கொண்ட மோசடி நபர்கள், அதன் பின் சிவக்குமாரை தொடர்பு கொள்ளவில்லை.
இரு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.