/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உதவித்தொகை தருவதாக ரூ.53 ஆயிரம் மோசடி
/
உதவித்தொகை தருவதாக ரூ.53 ஆயிரம் மோசடி
ADDED : ஆக 18, 2025 10:23 PM
கோவை; கோவை, புலியகுளத்தை சேர்ந்தவர் சார்லஸ் பீட்டர். இவரது மொபைல் போன் எண்ணுக்கு, வீடியோ அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், மத்திய அரசின் திட்டத்தின் கீழ், பள்ளிக்கல்வி உதவித் தொகைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கல்வி உதவித் தொகையாக, ரூ.38 ஆயிரம் ஆன்லைன் பரிவர்த்தனை வாயிலாக வழங்கப்படும் எனத் தெரிவித்தார். வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச தொகை இருந்தால் மட்டுமே, தொகை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சார்லஸ், உறவினரின் வங்கிக்கணக்கு விவரங்களை கொடுத்தார். உடனே அந்த வங்கிக்கணக்கில் இருந்தரூ.53 ஆயிரம் மாயமானது.
சார்லஸ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.