/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டதாரியிடம் ரூ.5.7 லட்சம் மோசடி
/
பட்டதாரியிடம் ரூ.5.7 லட்சம் மோசடி
ADDED : பிப் 17, 2024 02:28 AM
கோவை;பகுதி நேர வேலை வாய்ப்பு வாயிலாக அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி, பட்டதாரியிடம் ரூ.5.7 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை, ஹோப்ஸ் காலேஜ் பகுதியை சேர்ந்தவர் பூபதி,34. பட்டதாரியன இவரது மொபைல் போன் இன்ஸ்டாகிராம் ஆப்பில், பகுதி நேர வேலை காலியாக இருப்பதாக, தகவல் வந்தது.
அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய நபர், 'ஆன்லைன் வாயிலாக வீட்டிலிருந்து அதிகம் சம்பாதிக்கலாம் என்றும், அதற்கு பணம் முதலீடு செய்ய வேண்டும்' என்றும் கூறியிருக்கிறார்.
அதை நம்பி, பல்வேறு கட்டங்களாக 5.7 லட்சம் ரூபாய் அனுப்பினார். ஆன்லைனில் அந்த நபர் அனுப்பிய டாஸ்க்கை முடித்து அனுப்பினார். ஆனால், எந்த லாபத்தொகையும் கிடைக்கவில்லை. திரும்பவும் அழைத்து பேசிய போது, வரி செலுத்த வேண்டியிருப்பதால்,மேலும் பணம் அனுப்பி வைக்குமாறு கேட்டிருக்கிறார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பூபதி, கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.