/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூதாட்டியிடம் ரூ.59 லட்சம் மோசடி; இருவர் மீது போலீசார் வழக்கு
/
மூதாட்டியிடம் ரூ.59 லட்சம் மோசடி; இருவர் மீது போலீசார் வழக்கு
மூதாட்டியிடம் ரூ.59 லட்சம் மோசடி; இருவர் மீது போலீசார் வழக்கு
மூதாட்டியிடம் ரூ.59 லட்சம் மோசடி; இருவர் மீது போலீசார் வழக்கு
ADDED : அக் 08, 2024 12:36 AM
கோவை : நிலம் வாங்கித் தருவதாக மூதாட்டியிடம் ரூ.59 லட்சம் மோசடி செய்த இருவர் மீது, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கோவை பீளமேட்டை சேர்ந்தவர் சாவித்திரி, 82. இவர் கடந்த 2015ம் ஆண்டு நிலம் வாங்க முயற்சி செய்து வந்தார். அப்போது அவருக்கு மாதம்பட்டியை சேர்ந்த தங்கவேலு, 55, மற்றும் ராமசாமி, 50 ஆகியோர் அறிமுகமானார்கள். அவர்கள் சாவித்திரியிடம், 53 ஏக்கர் நிலம் பூண்டிக்கு அருகே உள்ள வெள்ளிமலை பட்டினம் கிராமத்தில் உள்ளதாகவும், ஒரு ஏக்கர் ரூ.12.10 லட்சத்துக்கு வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளனர்.
சாவித்திரி, அவர்களுக்கு வங்கி கணக்கு வாயிலாக ரூ.2.53 கோடி கொடுத்தார். அதன் பின், 34 ஏக்கர் நிலத்தை அவர்கள், சாவித்திரிக்கு கிரையம் செய்து கொடுத்தனர். மீதி 19 ஏக்கர் நிலத்திற்கான பணம் ரூ.59.16 லட்சத்தை சாவித்திரி, தங்கவேலுவிற்கு கொடுத்தார். பணத்தைப் பெற்று கொண்ட அவர்கள், பல நாட்களாகியும் மீதி இடத்தை வாங்கி கொடுக்காமல் இருந்துள்ளனர்.
சாவித்திரி தான் கொடுத்த ரூ.59.16 லட்சத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அவர்கள் ஏமாற்றி வந்தனர். சாவித்திரி போலீசில் புகார் அளிக்க போவதாக அவர்களிடம் தெரிவித்தார். உடனே தங்கவேலு தான் வாங்கிய பணத்தையும், பணம் திருப்பித் தரும் வரை வட்டியும் தருவதாக உறுதியளித்தார்.
வட்டியும் தராமல், பணத்தையும் தராமல் ஏமாற்றி வந்தார். சாவித்திரி கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தங்கவேலு, 50, மற்றும் ராமசாமி, 55 ஆகிய இருவர் மீதும், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.