/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்காலர்ஷிப் என்ற பெயரில் மாணவர்களை குறிவைத்து மோசடி
/
ஸ்காலர்ஷிப் என்ற பெயரில் மாணவர்களை குறிவைத்து மோசடி
ஸ்காலர்ஷிப் என்ற பெயரில் மாணவர்களை குறிவைத்து மோசடி
ஸ்காலர்ஷிப் என்ற பெயரில் மாணவர்களை குறிவைத்து மோசடி
ADDED : நவ 17, 2025 12:09 AM
மேட்டுப்பாளையம்: -: ஸ்காலர்ஷிப் என்ற பெயரில் மாணவர்களை குறி வைத்து மோசடி நடப்பதால் எச்சரிக்கையாக இருக்கும்படி போலீசார் அறிவுரை கூறியுள்ளனர்.
கோவை மாவட்ட புறநகர் பகுதிகளில் மாணவர்களை குறி வைத்து ஸ்காலர்ஷிப் பெயரில் மோசடி செய்யும் விதமாக, சைபர் மோசடி கும்பல் ஒன்று களம் இறங்கியுள்ளது.
இப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் சிலருக்கு, அக்கும்பல் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, உங்களது மகன் அல்லது மகள் பிளஸ் 2 முடித்துவிட்டு, கல்லுாரி சென்றுள்ளதால், மத்திய அரசிடம் இருந்து ஸ்காலர்ஷிப் வந்துள்ளதாக கூறுகின்றனர். ஸ்காலர்ஷிப் தொகை 'கூகுள் பே' வாயிலாக அனுப்பப்பட உள்ளதால் உடனடியாக இதைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் ஆசை வார்த்தை கூறுகின்றனர்.
'வாட்ஸ் அப்' பில் தொடர்பு கொண்டு, தொகையை அனுப்பி உள்ளதாகவும், நாங்கள் அனுப்பும் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து, நாங்கள் சொல்லும் ரூபாயை டைப் செய்து ஸ்காலர்ஷிப் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர். இக்கும்பல் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக, மத்திய அரசின் லோகோ மற்றும் உத்தரவு ஆணை உள்ளிட்டவற்றை போலியாக காண்பிக்கின்றனர். இவர்களிடம் மக்கள் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் என மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்ன காமணன் கூறியதாவது:-
ஸ்காலர்ஷிப் தொடர்பாக சந்தேகம் இருந்தால், அங்கீகரிக்கப்பட்ட இ--சேவை மையங்கள், சம்பந்தப்பட்ட வங்கிகளை நேரடியாக அணுக வேண்டும்.ஆன்லைன் அழைப்புகளை அப்படியே நம்பக்கூடாது. போலி லிங்குகளை தொட்டு, சைபர் மோசடியில் சிக்கிக்கொள்ள வேண்டாம்.
சந்தேகம் இருப்பின் போலீஸ் ஸ்டேஷனை அணுகலாம். சைபர் மோசடி நடந்தால் 1930 அழைக்கவும். இதுதொடர்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோருக்கு சைபர் கிரைம்களில் நடக்கும் அனைத்து விதமான மோசடிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.----

