ADDED : நவ 17, 2025 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலூர்: சூலூர் அருகே கஞ்சா விற்ற இருவரை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார், ஒரு ஸ்பின்னிங் மில்லில் இருந்து வெளியில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் அசாம் மாநி லத்தை சேர்ந்த சோமேஜ் அலி, 26, அமினுல் இஸ்லாம், 24 என்பது தெரிந்தது. அவர்களை சோதனை செய்ததில், ஒரு கிலோ, 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது.
கஞ்சாவை ரயிலில் கடத்தி வந்து, சூலூர் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

