/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் லாபம் தருவதாக மோசடி
/
பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் லாபம் தருவதாக மோசடி
பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் லாபம் தருவதாக மோசடி
பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் லாபம் தருவதாக மோசடி
ADDED : டிச 17, 2024 05:59 AM
கோவை; கோவை பி.என்.புதுாரை சேர்ந்த ஸ்ரீவத்சன், 54. உணவு நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களை பார்த்து வந்தார். அப்போது அதில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என பதிவு வந்துள்ளது.
அவர், அந்த பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருந்த வாட்ஸ் அப் குழுவில் தனது மொபைல் போன் எண்ணை இணைத்தார். மர்ம நபர் பங்குச் சந்தை திட்டங்கள் குறித்து அவரிடம் தெரிவித்து, அதில் முதலீடு செய்யும் படி கூறியுள்ளார்.
இதை நம்பிய ஸ்ரீவத்சன், அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக ரூ.28.84 லட்சத்தை அனுப்பி வைத்தார். அவருக்கு எந்தவித லாபமும் கிடைக்கவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திருப்பி பெற முயற்சி செய்த போது முடியவில்லை. மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.