/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச விடுதி வசதி
/
ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச விடுதி வசதி
ADDED : மே 14, 2025 11:46 PM
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே ஆதரவற்ற குழந்தைகள் தங்கி படிக்க இலவச விடுதிக்கு சேர்க்கை நடக்கிறது.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஜீவகாருண்ய சேவா ஆசிரமம் உள்ளது. இங்கு தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த மலைவாழ் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்கு இலவசமாக தங்குமிடம், உணவு, உடைகள் மற்றும் படிப்பதற்கான அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து கொடுக்கப்படுகிறது.
இந்த ஆசிரமம் கடந்த, 24 ஆண்டுகளாக இதை செய்து வருகிறது. தற்போது, இந்த ஆண்டுக்கான சேர்க்கை நடக்கிறது. இவ்விடுதியில், 5ம் வகுப்பு முதல், பிளஸ், 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. சேர விரும்புவோர் நேரிலோ அல்லது சுய விபரங்களை கடிதம் வாயிலாக எழுதி தொடர்பு கொள்ளலாம்.
மேலும், விபரங்களுக்கு, நிர்வாக அறங்காவலர், ஜீவகாருண்யா சேவா ஆசிரமம், பாலமலை ரோடு, நாயக்கன்பாளையம் போஸ்ட், பெரியநாயக்கன்பாளையம், கோவை 20 மற்றும் மொபைல் எண். 96772 09438 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என, நிர்வாகி செல்வராஜ் தெரிவித்தார்.