/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இலவச பூப்பந்தாட்ட பயிற்சி முகாம்; வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு
/
இலவச பூப்பந்தாட்ட பயிற்சி முகாம்; வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு
இலவச பூப்பந்தாட்ட பயிற்சி முகாம்; வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு
இலவச பூப்பந்தாட்ட பயிற்சி முகாம்; வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு
ADDED : மே 15, 2025 11:35 PM
கோவை : மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சார்பில் நடக்கும் இலவச கோடைகால பயிற்சிக்கு வீரர், வீராங்கனைகள் வரவேற்கப்படுகின்றனர்.
கோவை மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சார்பில் மாணவ, மாணவியரிடம் போட்டித் திறனை மேம்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் இலவச கோடைகால பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த வகையில், வரும், 19 முதல், 28ம் தேதி வரை பள்ளி மாணவர்கள், மாணவியர்களுக்கான பூப்பந்தாட்ட இலவச பயிற்சி முகாம், நேரு ஸ்டேடியம் எதிரே மாநகராட்சிக்கு சொந்தமான பூப்பந்தாட்ட மைதானத்தில் நடக்கிறது.
காலை, 7:00 முதல், 10:00 மணி வரை நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்பவர்களுக்கு முட்டை, பால் போன்ற உணவுகள் வழங்கப்படுகிறது.
பயிற்சியின்போது தனித்திறமையை வெளிப்படுத்தும் வீரர், வீராங்கனைகள் மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க முன்னுரிமை அளிக்கப்படும் என, பூப்பந்தாட்ட கழக பொதுச்செயலாளர் மார்ஷல் தெரிவித்துள்ளார்.