/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புற்றுநோய் கண்டறிய இலவச முகாம்
/
புற்றுநோய் கண்டறிய இலவச முகாம்
ADDED : ஜன 13, 2025 12:09 AM

அன்னுார்; 'புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் குணப்படுத்தலாம்,' என முகாமில் தெரிவிக்கப்பட்டது.
கோவை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை, அன்னுார் டவுன் ரோட்டரி சங்கம், மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம் சார்பில், அன்னுாரில், மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இலவச பரிசோதனை முகாம் நேற்றுமுன்தினம் நடந்தது. முகாமில் 55 பெண்களுக்கு, 86 பரிசோதனைகள் செய்யப்பட்டன.
முகாமில் டாக்டர்கள் பேசுகையில், 'ஆரம்ப நிலையில் புற்றுநோயை கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு தேவை. 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தற்போது குறைந்த கட்டணத்தில் புற்று நோய்க்கான சிகிச்சை முறை வந்துள்ளது,' என்றனர்.
இதில், ரோட்டரி சங்க நிர்வாகி சங்கவி மற்றும் உறுப்பினர்கள், மருத்துவக் குழுவினர் பங்கேற்றனர்.