/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிறவி இருதய குறைபாடுகளுக்கு இதோ இலவச இருதய சிகிச்சை
/
பிறவி இருதய குறைபாடுகளுக்கு இதோ இலவச இருதய சிகிச்சை
பிறவி இருதய குறைபாடுகளுக்கு இதோ இலவச இருதய சிகிச்சை
பிறவி இருதய குறைபாடுகளுக்கு இதோ இலவச இருதய சிகிச்சை
ADDED : ஜன 28, 2025 11:48 PM

கோவை; கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையின் இருதயவியல் துறையின் கீழ், பிறவி இருதய குறைபாடுகளுக்கு, இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த, 25ம் தேதி இரண்டு குழந்தை, ஒரு பெண் உட்பட மூன்று பேருக்கு, 'பெர்குடேனியஸ் டிரான்ஸ்கதீடர்'முறையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதில், இருவருக்கு ஏட்ரியல் குறைபாடும், ஒருவருக்கு வென்ட்ரிகுலர் செப்டல் குறைபாடும் இருந்ததாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சிகிச்சை, அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது:
இருதயவியல் துறையின் மருத்துவ குழு, இத்தகைய துல்லியமான அறுவை சிகிச்சை மேற்கொள்ள செயல்முறையை, இரண்டு வாரங்களுக்கு முன்பே திட்டமிட்டு, இதயத்தின் துளையை மூட பிரத்யேக 'டிவைஸ்' தயார் செய்தனர்.
இச்சிகிச்சை, பெர்குடேனியஸ் டிரான்ஸ்கதீடர் முறை வாயிலாக செய்யப்பட்டதால், நோயாளிகளுக்கு 'ஓபன் ஹார்ட் சர்ஜரி'யில் ஏற்படும் வலி மற்றும் ரத்த இழப்பு தவிர்க்கப்பட்டது. நோயாளிகள் மூவரும் சிகிச்சைக்கு பின், நலமுடன் உள்ளனர்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
அறுவை சிகிச்சை குழுவில் இடம் பெற்ற, இருதயத்துறை தலைவர் நம்பிராஜன், மருத்துவர்கள் சக்கரவர்த்தி, ஜெகதீஷ், செந்தில், சதிஸ்குமார், மணிகண்டன் ஆகியோரை, டீன் நிர்மலா பாராட்டினார்.