தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

அரசு போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

அரசு போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு


ADDED : அக் 08, 2025 11:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2025 11:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி; போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

கோவை கலெக்டர் பவன்குமார் அறிக்கை:

மத்திய அரசு மற்றும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பு, கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடந்து வருகிறது. ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறு தேர்வுகள், மாதிரித்தேர்வுகள் நடத்தப்படும்.

போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்காக 5,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அடங்கிய நுாலக வசதி செய்யப்பட்டுள்ளது.

பங்கேற்க விரும்பும் மாணவர்கள், https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து, போட்டித்தேர்வுக்கான பாடக்குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாகவோ அல்லது 93615 76081 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us