/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.ஐ., பதவி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
/
எஸ்.ஐ., பதவி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
ADDED : ஏப் 24, 2025 11:11 PM
பெ.நா.பாளையம்; கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் போலீஸ் எஸ்.ஐ.,களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போலீஸ் எஸ்.ஐ., பதவிகளுக்கான, 1299 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க இருக்கும் மனுதாரர்கள், தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் மே., 3ம் தேதி முதல், வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்) நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் மே 3ம் தேதி சனிக்கிழமை காலை, 10.30 மணிக்கு, அறிமுக வகுப்பு நடைபெற உள்ளது.
இவ்வகுப்பில் மனுதாரர்கள் கலந்து கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பயிற்சி வகுப்பில், வாராந்திர மாதிரி தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள் நடக்கிறது. மேலும், http://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து இலவசமாக பாடக் குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், மருத்துவர் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் மருந்தாளுநர் பணி காலி இட போட்டி தேர்வுகளுக்கான இணைய வழி இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் துவக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுனர்கள் கொண்டு நடத்தப்பட உள்ளது.
போட்டித் தேர்வு வகுப்புகள் தொடர்பான தகவல்களுக்கு 04222642388, 9499055937 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.