தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குரூப் -1 தேர்வுக்கு இலவச பயிற்சி

 குரூப் -1 தேர்வுக்கு இலவச பயிற்சி

 குரூப் -1 தேர்வுக்கு இலவச பயிற்சி


ADDED : பிப் 18, 2026 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 06:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குரூப் -1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது.

குரூப் -1 தேர்வுக்கான அறிவிப்புகள், வரும் ஜூன் 26ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து, திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், குரூப் -1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே பயிற்சி வகுப்பை துவக்கிவைத்து பேசியதாவது:

இப்பயிற்சியின்போது, மாதம் இரண்டுமுறை மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், 0421 2999152, 94990 55944 என்கிற எண்களில் தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளலாம்.

போட்டித்தேர்வுகளை எதிர்கொண்டு வரும் மாணவர்கள், தங்கள் இலக்கை அடைவதற்கு மாவட்ட நிர்வாகம் துணை நிற்கும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

வேலைவாய்ப்பு துறை கோவை மண்டல இணை இயக்குனர் ஜோதிமணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ், மாவட்ட திறன் அலுவலர் சரவணன் உள்பட அலுவலர்கள், பயிற்சி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

- நமது நிருபர் -:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us