ADDED : நவ 18, 2024 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை ; கோவை மாவட்டத்தில் பணியாற்றும் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு இலவச கண் பரிசோதனை முகாம் கோவை எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.
கோவை மாவட்ட போலீசில் பணியாற்றும் அதிகாரிகள், ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் அவர்களின் கும்பத்தினருக்காக கோவை மாவட்ட போலீஸ் மற்றும் வாசன் கண் மருத்துவமனை சார்பில் இலவச பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. முகாமை மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.
முகாமில் போலீஸ் அதிகாரிகள், போலீசார் மற்றும் குடும்பத்தினர் என 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.