ADDED : ஜூலை 27, 2025 09:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் அசோசியேசன் ஆப் அலையன்ஸ் கிளப் இன்டர்நேஷனல், 270 எஸ் - பிரசிடென்சி அலையன்ஸ் கிளப் சார்பில், மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவியருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
மொத்தம், 1,260 மாணவியர் பரிசோதிக்கப்பட்டனர். அதில், 40 மாணவியருக்கு கண்ணாடிகள் பரிந்துரைக்கப்பட்டன. பார்வை குறைபாடுள்ள, 26 மாணவியர், அரவிந்த் கண் மருத்துவமனையில் இலவச கூடுதல் பரிசோதனைகள், சிகிச்சைக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டனர்.
தலைமையாசிரியர் சகிலா, பிரசிடென்சி அலையன்ஸ் கிளப் முன்னாள் மாவட்ட ஆளுநர் சங்கர் செல்வராஜ், தொழிலதிபர் பாலாஜி சேதுராமலிங்கம், மக்கள் தொடர்பு அலுவலர் விவேக் சந்துரு, உறுப்பினர் கார்த்திக்கேயன் பங்கேற்றனர்.