ADDED : ஜூலை 31, 2025 11:32 PM

கோவை; கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், கண் பரிசோதனை இலவச முகாம் நடந்தது.
சர்வதேச கூட்டுறவு ஆண்டு -2025' முன்னிட்டு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில், பல்வேறு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
க டந்த மார்ச் மாதம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகம் மற்றும் கிளைகளில் துாய்மைப்பணி மற்றும் மரக்கன்று நடுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஏப்., மாதம் புதிய கணக்கு துவக்கி, மே மாதம், கூட்டுறவின் சேவை மற்றும் நோக்கம் குறித்தான கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
ஜூன் மாதம், ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், அங்கு பயிலும் மாணவர்களுக்கு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டன.
நேற்று, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணை ந்து, கண் பரிசோதனை இலவச மருத்துவ முகாம், தலைமையகத்தில் நடத்தப்பட்டது. கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடந்த முகாமில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.