தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இலவச கண் புரை பரிசோதனை முகாம்

இலவச கண் புரை பரிசோதனை முகாம்

இலவச கண் புரை பரிசோதனை முகாம்


ADDED : பிப் 20, 2024 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2024 05:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சொக்கனுாரில் இலவச கண் புரை பரிசோதனை முகாம் நாளை நடக்கிறது. இதில் மக்கள் பங்கேற்று பயனடையலாம்.

பல்வேறு அமைப்புகள் சார்பில், பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், கிணத்துக்கடவு, சொக்கனுார் ஊராட்சி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இலவச கண் புரை பரிசோதனை முகாம் நாளை (21ம் தேதி) நடக்கிறது.

இதில், அனைத்து விதமான கண் குறைபாடுகளுக்கும் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. கண்ணில் ஏதேனும் குறைபாடு இருப்பின், அவற்றை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. முகாமில் பங்கேற்று, கண் குறைபாடு இருப்பவர்களுக்கு, இலவச கண் கண்ணாடி வழங்கப்படுகிறது. மேலும், அறுவை சிகிச்சைகளும் இலவசமாக செய்யப்படுகிறது.

மற்றும் அறுவை சிகிச்சை செய்யப்படும் நபர்களுக்கு, இலவச போக்குவரத்து, மருந்து மற்றும் உணவு போன்றவைகள் வழக்கப்படுகிறது. எனவே, சொக்கனுார் ஊராட்சி பகுதி மக்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கண் பரிசோதனை முகாமில் கலந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us