/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இலவச வீட்டுமனைப்பட்டா; மா.கம்யூ., கட்சி கோரிக்கை
/
இலவச வீட்டுமனைப்பட்டா; மா.கம்யூ., கட்சி கோரிக்கை
ADDED : ஏப் 03, 2025 11:47 PM
வால்பாறை; வீட்டு மனைப்பட்டாவுக்கான மனுக்களை தாசில்தார் அலுவலகத்திலேயே பெற, மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும், என, மா.கம்யூ., கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
வால்பாறை தாலுகா மா.கம்யூ., கட்சியின் செயலாளர் பரமசிவம், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
வால்பாறையில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள், மூன்று தலைமுறையாக எஸ்டேட்களில் பணிபுரிந்து வருகின்றனர். பணி ஓய்வு பெற்ற நிலையிலும், வால்பாறையில் சொந்த வீடு இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், வீட்டுவசதி வாரியத்தின் வாயிலாக வீட்டு மனை பட்டா வழங்குவதாக கூறி, தொழிலாளர்களை கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு சிலர் அழைத்து செல்கின்றனர். இதனால், தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவதுடன், வீண் அலைச்சலும், பணவிரயமும் ஏற்படுகிறது.
எனவே, கூலி வேலை செய்யும் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்கும் வகையில், அவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, தாசில்தார் அலுவலகத்திலேயே பெற, மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

