/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை அரசு கலைக் கல்லுாரியில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்
/
கோவை அரசு கலைக் கல்லுாரியில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்
கோவை அரசு கலைக் கல்லுாரியில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்
கோவை அரசு கலைக் கல்லுாரியில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்
ADDED : ஜன 21, 2026 05:08 AM

கோவை: அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கப்பட்டன.
அரசு கலைக் கல்லூரியில் நேற்று நடந்த விழாவில், கோவை எம்.பி. ராஜ்குமார் லேப்டாப் வழங்கினார். 749 மாணவர்கள், 642 மாணவிகள் என 1,391 பேர் பயனடைந்தனர்.
நிகழ்வில், கல்லூரி முதல்வர் எழிலி, கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் செண்பகலெட்சுமி, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் செல்வராஜ், தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, புலியகுளம் ஆகிய பகுதிகளில் செயல்படும் அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு 750 லேப்டாப் வழங்கப்பட்டதாகவும், வால்பாறை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் அரசு கலைக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வரும் வாரத்தில் விநியோகிக்கப்படவுள்ளதாகவும், திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
தனியார் கல்லூரி மாணவர்களுக்கும்
தமிழ்ப் புதல்வன், புதுமைப்பெண், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்றவற்றில் பயன்பெறுவோர் மற்றும் பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. கல்வி உதவித்தொகை பெறுவோர், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்துக்கும் மிகாமல் இருத்தல் போன்ற வரைமுறைகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, சுமார் 33 ஆயிரம் லேப்டாப் வழங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

