தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இலவச நூலகம் திறப்பு விழா

இலவச நூலகம் திறப்பு விழா

இலவச நூலகம் திறப்பு விழா


ADDED : ஆக 31, 2025 08:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2025 08:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார்; அன்னுாரில் இலவச நூலக திறப்பு விழா நேற்று நடந்தது.

அன்னுார், சத்தி ரோட்டில், உப்பு தோட்டம் பகுதியில், இலவச நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் நூலகத்தை திறந்து வைத்தனர்.

நூலகத்தில் போட்டித் தேர்வில் பங்கேற்போருக்கு பயன்படும் வகையில் 1,000க்கும் மேற்பட்ட புத்தகங்களும், திராவிட இயக்க வரலாற்றை கூறும் புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளன.

இலவச 'வைபை' வசதியுடன் ஆன்லைன் வாயிலாக கற்க கம்ப்யூட்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தி.மு.க., பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் அம்பாள் நந்தகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us