/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்கள பணியாளர்களுக்கு நுரையீரல் இலவச பரிசோதனை
/
முன்கள பணியாளர்களுக்கு நுரையீரல் இலவச பரிசோதனை
ADDED : அக் 25, 2024 10:27 PM
கோவை: கோவையில் இந்திய மருத்துவ சங்கம், கோவை நுரையீரல் மருத்துவர்கள் சங்கம் சார்பில், கோவை நகர முன்களப் பணியாளர்களுக்கு, இலவச நுரையீரல் பரிசோதனை முகாம், புரூக்பாண்டு சாலையில் உள்ள, இந்திய மருத்துவ சங்க கட்டடத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து, இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் பிரியா, செயலர் ராமலிங்கம், கோவை நுரையீரல் டாக்டர்கள் சங்கத் தலைவர் நாகராஜன், செயலர் நந்தகோபால் மற்றும் மோகன்குமார், கார்த்திகேயன் ஆகியோர் கூறியதாவது:
சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக நுரையீரல் நோய்களால், 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள், துாய்மைப்பணியாளர்கள், தீயணைப்புப்படை வீரர்கள், ஆட்டோ, டாக்சி டிரைவர்கள், போக்குவரத்து போலீசார் போன்ற அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும், இலவச நுரையீரல் பரிசோதனை மற்றும் நுரையீரல் ஆரோக்கியம் பற்றிய, விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
நுரையீரல் நோய்களுக்கான தேசிய மாநாடு, அடுத்த மாதம் 21 முதல் 24ம் தேதி வரை, கோவையில் நடைபெற உள்ளது. மாநாட்டையொட்டி, இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.