ADDED : டிச 24, 2024 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அன்னுார் டவுன் ரோட்டரி சங்கம், கோவை ரெக்ஸ் மருத்துவமனை, ஆசிரியர் லட்சுமணன், பெட்டம்மாள், நவநீதன் அறக்கட்டளை சார்பில் அன்னுாரில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
முகாமில், டாக்டர் ரெக்ஸ் பேசுகையில், மூட்டு வலி, தோள்பட்டை வலி உள்ளிட்ட வலிகளை அலட்சியப்படுத்தக் கூடாது. நாளடைவில் அவை அபாய நிலைக்கு கொண்டு சென்று விடும். என்றார்.
ரெக்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், ரோட்டரி சங்க செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் லட்சுமண மூர்த்தி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.