/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புற்றுநோய், எலும்பு மூட்டு இலவச மருத்துவ முகாம்
/
புற்றுநோய், எலும்பு மூட்டு இலவச மருத்துவ முகாம்
ADDED : ஜூலை 23, 2025 09:01 PM
பொள்ளாச்சி; கோவை கே.எம்.சி.ெஹச்., மருத்துவமனை சார்பில், பொள்ளாச்சி வேலுசாமி கல்யாண மண்டபத்தில், வரும், 27ம் தேதி, இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடக்கிறது. காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை முகாம் நடக்கிறது.
மூட்டு மாற்று சிகிச்சை தேவைப்படுவோர் அல்லது பரிந்துரைக்கப்பட்டவர்கள், புற்றுநோய், எலும்பு, மூட்டு, பொது மருத்துவம், மகளிர் மருத்துவம் போன்றவற்றுக்கு இலவச ஆலோசனை அளிக்கப்படும். எலும்பு அடர்த்தி பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு, கர்ப்பப்பை வாய் பரிசோதனைகள், டாக்டர் பரிந்துரைப்படி இலவசமாக செய்யப்படும்.
மேலும், குரலில் திடீர் மாற்றம், திடீர் எடை குறைவு, ஆறாத வாய்ப்புண், கழுத்தில் வீக்கம், கட்டி போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்போருக்கு பரிந்துரைக்கப்படும் இதர பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை, சலுகை கட்டணத்தில் வழங்கப்படும்.
இந்த ஆலோசனை முகாமிற்கு வரும்போது, பழைய மருத்துவ பதிவுகளையும், எக்ஸ் ரே, மருந்து சீட்டுகளையும் எடுத்துவர வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 74188 87411 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.